Jul 17, 2012

யோகாசன பயிற்சி - பகுதி - 11

முந்தைய பகுதி:

யோகாசன பயிற்சி - பகுதி - 10


பவன முக்தாசனம்

 


பிரசவித்த பெண்களுக்கு முக்கியமான ஆசனமாகும். பவனம் என்ற வடமொழி சொல்லுக்கு காற்று என்று பொருள்.முக்தா என்றால் விடுவித்தல் என்று அர்த்தம். அதாவது வாயு விடுவிப்பு ஆசனம் என்பதே இந்த ஆசனத்தின் குறிப்பாகும். அடிவயிற்றில் சேரும் வாயுக்களை வெளியேற்றுவதால் அந்தபெயர்.


செய்முறை


மல்லாந்து படுத்துக்கொள்ளவும். பக்கவாட்டில் கைகள் நீட்டியிருக்கப்பட வேண்டும். உள்ளங்கைகள் கீழ் நோக்கி, புறங்கைகள் மேலே இருக்குமாறு வைத்துக்கொள்ள வேண்டும். மூச்சை நன்றாக இழுத்து மெதுவாக விடவும்.  மூச்சுக்காற்றை வெளியே விடும்போது இரண்டு கால்களையும் ஒன்று சேர்த்து உயர்த்தி மடித்து வயிற்றின் மீதுகொண்டுவரவும். கைவிரல்களை ஒன்று சேர்த்து அல்லது தனித்தனியாக கால் முட்டிகளை பிடித்து வயிற்றில் அழுத்தம் கொடு‌க்கவு‌ம்.  தலையை உயர்த்தி முகவாய் கட்டையை இரண்டு முட்டிகளுக்கு இடையில் கொண்டு வந்து வைக்கவேண்டும்இதனை ஒவ்வொரு கால்களாகவும் செய்யலாம்.

சாதாரண மூச்சில் 15வினாடிகள் இருந்து விட்டு கால்களையும் தலையையும் பிரித்து மல்லாந்து படுத்து ஓய்வு எடுக்க வேண்டும். மூன்று முறை செய்து விட்டு இயல்பு நிலைக்கு வரவேண்டும்.

பலன்கள்


·         அல்சர், வயிற்று புற்றுநோய்க்கு சிறந்த ஆசனம்
·         மூட்டுவலிநீங்கும்.
·         மாரடைப்பு நோய், குடல்வால்வுக் கோளாறுகள் நீங்கும்.
·         பெண்களுக்கு கருப்பைகோளாறுகள் சரியாகிவிடும்
·         பிரசவித்த பெண்களின் அடிவயிற்றில் பெருக்கம் குறையும்.
·         மலச்சிக்கல், செரியாமை சீரடையும். அடி முதுகு வலி குணமாகும்

எச்சரிக்கை


கடைசி ஐந்து முதுகுத்தண்டுவட எலும்புகளின் இறுதியில் சேகரம் என்ற பெரிய எலும்பு உள்ளது. அந்த சேகரத்தின் மேல் கடைசி எலும்பு அழுத்தி விட்டால் வலி மிகக்கடுமையாக இருக்கும்.

சாதாரண மூச்சில் செய்து பழகவும். வயிற்றில் அழுத்தம் குறைவாக கொடுக்கவும்

 

நன்றி : விக்கிபீடியா, கூகுள்

யோகப்பயிற்சி தொடரும்...........


Jul 7, 2012

யோகாசன பயிற்சி - பகுதி - 10


முந்தைய பகுதி:

யோகாசன பயிற்சி - பகுதி - 9


தனுராசனம்


தனுஷ் என்றால் வில் என்று பொருள். உடலை வில் போல வளைப்பதால் யோகாவில் இந்த ஆசனத்திற்கு தனுராசனம் என பெயரிடப்பட்டுள்ளது. புஜங்காசனமும், சலபாசனமும் இணைந்து செய்வதே தனுராசனம். வயிற்றின் மேல் பகுதி புஜங்காசனம் போலவும், வயிற்றுக்கு கீழ் பகுதி சலபாசனம் போலவும், இரண்டு ஆசனங்களையும் கைகள் மற்றும் கால்களால் இணைப்பதே தனுராசனமாகும்

செய்முறை 

முதலில் தரையில் (விரிப்பில்) குப்புறபடுக்கவும். உடல் நேர்க்கோடு போலவும், கால்கள் சேர்ந்து இருக்கட்டும். கைகள் பக்கவாட்டில் வைத்துக் கொள்ளவும். மெதுவாக மூச்சை உள்ளிழுத்து கால்களை பின்புறமாக மேலே தூக்கவேண்டும்.கைகளால் கணுக்கால்களை பிடிக்கவும்.அதே சமயத்தில் தலையை மேல் தூக்கிப் பின்புறமாக வளைக்க வேண்டும் வயிற்றுப்பகுதி மட்டும் தரையில் படிந்திருக்க வேண்டும். இந்த நிலையில் நார்மலாக மூச்சு விட்டு கொண்டு சில நொடிகள் இருக்கவும் மூச்சை வெளிவிட்டு நிதானமாக நார்மல் நிலைக்கு திரும்பவும்.இந்த ஆசனத்தை இரண்டு நிமிடம் செய்யலாம்

பயன்கள்


·    இது பெண்களுக்கு நல்ல பலன் தரும் ஆசனம். மாதவிடாய், கர்ப்பக் கோளாறுகள், வயிற்றுக் கோளாறுகள் நீங்கும்.
·    அதிக கொழுப்பை நீக்கி பருமனை குறைகிறது.
நரம்புகளும் முதுகெலும்பும் வளையும். கூன் முதுகு, முதுகு வலி, இடுப்பு வலி நீங்கும்.
·    சிறுநீரக நோய்கள் நீங்கும்.
·    பெண்களுடைய ஓவரி ஆண்களுடைய டெஸ்டீஸ் மற்றும் சிறுநீரகங்களைச் சுறுசுறுப்படையச் செய்து அதனால் பலம் பெற்று இளமை உண்டாகும்.

எச்சரிக்கை


உயர் ரத்த அழுத்தம், அடிவயிறு கோளாறுகள், முழங்கால், இடுப்பு வலி முதுகுவலி உள்ளவர்கள் இந்த ஆசனத்தை தவிர்க்கவும்.

 

 

நன்றி : விக்கிபீடியா, கூகுள்

யோகப்பயிற்சி தொடரும்...........

 

Jul 5, 2012

யோகாசன பயிற்சி - பகுதி - 9

முந்தைய பகுதி:

யோகாசன பயிற்சி - பகுதி - 8


சலபாசனம்

 

 









சலபம் என்பது வடமொழி சொல் . இதன் பொருள் வெட்டுக்கிளி. இந்த ஆசனத்தை பார்பதற்கு வெட்டுக்கிளி போல் அமைந்துள்ளதால் இவ்வாறு பெயரிடப்பட்டுள்ளது. உடலை ஆரோக்கியமாக வைத்துக்கொள்வதற்கு சிறந்த ஆசனமாகும்.

செய்முறை

 

சமதளத்தில் குப்புறப் படுத்து கொள்ள வேண்டும் . உள்ளங்கை மேல்நோக்கி இருக்குமாறு கைகளை பக்கவாட்டில் உடலோடு ஒட்டி வைத்து கொள்ள வேண்டும். முகத்தை முன் தூக்கி முகவாய்க்கட்டை அதாவது தாடையை தரையில் ஊன்றியபடி தலையை உயர்த்திக்கொள்ள வேண்டும். நன்கு மூச்சை இழுத்து கைகளை தரையில் அழுத்தி கால்களை முதுகு புறம் தூக்க வேண்டும். முழங்கால்கள் மடங்கக் கூடாது.இந்த நிலையில் 15 வினாடிகள் இருந்து விட்டு பின் மெதுவாக மூச்சை வெளிவிடவேண்டும். அப்போது தலை, கழுத்து, மார்புப் பகுதி ஒரே நேரத்தில் சீராக பழைய நிலைக்குத் திருப்ப வேண்டும்.

பலன்கள்

 

·         தேவையற்ற கொழுப்புகள் கரைக்கப்பட்டு தொப்பையைக் குறைக்கிறது.
·         முதுகு தண்டு, நுரையீரல் நன்கு பலம் அடைகின்றன.
·         ஆண்மை சக்திபெருகும்.
·         ஜீரண சக்தியை பெருக்கும்.
·         மலச்சிக்கலை போக்கும்.
·         சிறுநீரகங்கள் சிறப்பாக செயல்படும்.
·         சோம்பல் இன்றி எப்போதும் புத்துணர்ச்சியுடன் இருக்கச் செய்யும்.
·         இதய மற்றும் ரத்த அழுத்த நோய் உள்ளவர்கள் இவ்வாசனம் செய்வதைத் தவிர்க்க வேண்டும்.



 

நன்றி : விக்கிபீடியா, கூகுள்

யோகப்பயிற்சி தொடரும்...........



Jul 4, 2012

யோகாசன பயிற்சி - பகுதி - 8




முந்தைய பகுதி:



புஜங்காசனம்



புஜங்கம் என்றால் நாகப்பாம்பு என்று பொருள், இந்த ஆசன நிலையில் தலைதூக்கி இருக்க நல்லபாம்பு படம் எடுத்தது போல தோற்றமளிப்பதால் இதற்கு இந்தப் பெயர் ஏற்பட்டது.

இது குறிப்பாக பெண்களுக்கு உகந்த ஆசனம்.

செய்முறை 

ஒரு விரிப்பை நீளத்தில் மடித்து தரைமீது வைத்து அதன்மேல் மெதுவாக குப்புறப் படுக்கவும். உடலில் உள்ள தசைகளுக்கு ஒருவிதமான ஒய்வு தரும் நிலையை உருவாக்கிக் கொள்ளவும்.

இரு கைகளையும், இரு பக்கங்களிலும் உங்கள் உள்ளங்கை, விரிப்பின் மேல் இருக்கும்படி அமைக்கவும். விரல்கள் முன்புறம் நோக்கி இருக்க வேண்டும். கால்களின் முன் பாதங்கள் பின்புறம் நோக்கி இருப்பது போல படுத்திருக்க வேண்டும்.

அதே சமயத்தில் நெற்றி, மேவாய், தரையைத் தொட்டுக் கொண்டிருப்பது போல வைத்து உடல் உறுப்புகளைத் தளர்ந்த நிலையில் வைத்திருக்கவும்.

பின்பு மெதுவாக தலையையும், மார்பையும், மூச்சை இழுத்துக் கொண்டு மேல் நோக்கி உயர்த்தவும். இதில் முதுகுத் தண்டு பின்பக்கமாக வளைவு தருவதைப் பார்க்கலாம். இப்போது உடலை ஆட்டவோ, அசைக்கவோ கூடாது, சிறிது சிறிதாக மேல்நோக்கி உயர்த்திக் கொண்டே செல்ல வேண்டும்.

இடுப்புப் பகுதி விரிப்பிலேயே இருக்க வேண்டும். முன் பாதங்களும் தரையைத் தொட்டுக் கொண்டிருக்க வேண்டும். பின்பு மெதுவாக தலையைப் பழைய நிலைக்கு மூச்சைவிட்டுக் கொண்டே வரவும்.

இந்த ஆசனம் செய்யும்போது தொப்புளில் இருந்து கால் வரையிலும், பூமியில் படும்படி வைத்துக்கொள்ள வேண்டும். பிறகு மெதுவாக கை அழுத்தத்தைக் குறைத்து மெதுவாக முன்பு இருந்த நிலையில் முன்பகுதி உடலைக் கீழாக கொண்டு வரலாம்.

பிறகு மூச்சை வெளியே விடவும். இந்த ஆசனத்தை செய்ய ஆரம்பிக்கும்போது முதுகை கொஞ்சம் கொஞ்சமாக வளைத்து கையை முழுவதும் நிமிர்த்தாமல் பழக்கத்திற்குக் கொண்டு வர வேண்டும்.

இந்த ஆசனத்தினை ஐந்திலிருந்து பத்து தடவைகள் செய்து வரலாம்.

பலன்கள்

  • இளம் பெண்களுக்கு இந்த ஆசனம் மிகுந்த பலன்களைத் தரும்.
  • பெண்களின் அண்ட கோசத்தையும் கருப்பையையும் சுறுசுறுப்படையச் செய்து வலுவாக்கும். குறித்த காலத்தில் மாதவிலக்கு தடையின்றி வரும்.
  • மலச்சிக்கல் நீங்கும். குடல் பக்கம் அழுத்தப்படுவதால் தங்கியிருக்கும் மலமானது மலத்துவாரத்துக்குத் தள்ளப்படும்.
  • மூலவியாதி நீங்கும்.
  • இடுப்புவலி நீங்கும்.
  • இந்திரியக் கோளாறுகள் நீங்கி நீடித்த இல்லற இன்பத்துக்கு வழி வகுக்கும்.
  • தண்டுவடம், பிடரியை வலுவள்ளதாக்கும்.
  • இடுப்பைப் பலப்படுத்தி ஊளைச் சதையைக் குறைக்கும்.
  • முதுகெலும்பை உறுதியாக்கும். கைகளுக்குப் பலத்தை ஏற்படுத்தும்.
  • மார்பில் உள்ள சளியை நீக்கிவிடும் வல்லமை பெற்றது.
  • கூன் நிமிரும்.
  • நல்ல பசி உண்டாகும்.
  • தொந்தி விழுவதை தடுக்கிறது.
  • முதுகு எலும்பிற்கு ஆரோக்கியம் அளிக்கிறது.


நன்றி : விக்கிபீடியா, கூகுள்

யோகப்பயிற்சி தொடரும்...........