Jun 30, 2012

யோகாசன பயிற்சி - பகுதி - 4


முந்தைய பகுதி:


யோகாசன பயிற்சி - பகுதி - 3



யோக முத்ரா

 


செய்முறை


இது பத்மாசனத்திற்கு அடுத்தபடியான ஆசனமாகும். யோகாவில் இது அமர்ந்து கொண்டு செய்யும் ஆசனமாகும். கால்களை நீட்டி உட்கார்ந்து, வலது காலை கைகளின் உதவியுடன் தூக்கி இடது தொடையில் அடிவயிற்றை ஒட்டினாற் போல் வைக்கவும். பின்னர் இடது காலை தூக்கி வலது தொடையில் அடிவயிற்றை ஒட்டினாற் போல் வைக்கவும். அடிப்பாதங்கள் மேல் நோக்கி இருக்க வேண்டும். முழங்கால்கள் தரையில் படக் கூடியதாகமுதுகு எலும்பை நேராக நிமிர்த்திக் கம்பீரமாக உட்கார வேண்டும். இவ்வாறு பத்மாசன நிலையில் உட்கார்ந்து கொண்டு கைகளை பின்புறம் அதாவது முதுகுப் புறம் கொண்டு சென்று இடது கை மணிக்கட்டுப் பகுதியை வலது கையால் பிடித்துக்கொண்டு  மூச்சை மெதுவாக விட்டவாறே உடலை முன்னோக்கிக் குனிந்து தாடையால் தரையைத் தொட வேண்டும். கீழ் இடுப்புப் பகுதியை (மூலாதாரத்தை) நினைவில் கொண்டு இயல்பான சுவாசத்தில் இருந்து கொண்டு தலையையும் தோளையும் முன்குனிந்தால் எளிதாய் வரும் சில வினாடி இந்நிலையில் இருந்தபின் தலையை நேராக முன்போல் நிமிர்த்தவும். நிமிரும் போது மூச்சை உள்ளுக்கு இழுக்கவும். ஒரு முறைக்கு 20 வினாடியாக 5 முறை செய்யலாம்.

பலன்கள்

  • பெண்களுக்கு சிறந்த ஆசனமாகும். கர்ப்பப்பை இறக்கம், தொப்பை, அடிவயிறு கனம், தொடை சதை கனம், இடுப்பு வலி நீங்கும்.
  • பெண்களின் மாதவிடாய் நோய்கள் நீங்கும்.
  • தொப்பை குறையும்.
  • அஜீரணம், மலச்சிக்கல் நீங்கும்.

எச்சரிக்கை


·       கர்ப்பிணிப் பெண்கள், நோயால் அவதியுறுபவர்கள் இவ்வாசனத்தை தவிர்ப்பது நல்லது.


 


வீராசனம்


வீராசனம் யோகாசனங்களுள் ஒன்று. இது சமதரையில் அமரும் முறையாகும். பத்மாசனம் செய்ய முடியாதவர்களும் பத்மாசனம் செய்ய சிரமப்படுவோரும் வீராசனம் செய்யலாம்.

 

செய்முறை


கால்களை நீட்டி உட்கார்ந்து, வலது காலை சாதாரணமாக மடித்துக் கொண்டு இடது காலை வலது தொடையில் அடிவயிற்றை ஒட்டினாற் போல் வைக்கவும். இடது காலை மடித்து வலது காலை இடது தொடையிலும் வைத்தும் உட்காரலாம். முழங்கால்கள் தரையில் படக் கூடியதாக நேராக நிமிர்ந்து உட்கார வேண்டும்.

பத்மாசனம் செய்ய முடியாதவர்கள் முதலில் வீராசனம் செய்து பழகியபின் பத்மாசனம் செய்யக் கூடியதாக இருக்கும். ஆரம்பத்தில் சிரமமிருந்தால் கால்களை மாற்றிப் போடலாம்.

பலன்கள்

இடுப்பு பலப்படும். சுறுசுறுப்போடு இருக்கலாம். இரத்தம் நன்கு சுத்திகரிக்கப்படும்.

 

நன்றி : விக்கிபீடியா, கூகுள்                          
யோகப்பயிற்சி தொடரும்...........

No comments: