Jul 20, 2012

யோகாசன பயிற்சி - பகுதி - 15

முந்தைய பகுதி:

யோகாசன பயிற்சி - பகுதி - 14


திரிகோணாசனம்

 



உடலில் வாதம் அதிகமானால் சோம்பல் தலைதூக்கும். எந்த வேலையிலும் மனம் ஈடுபடாது. உடலும் ஒத்துழைக்காது.

சிலருக்கு வாதம் அதிகம் ஆகும் நிலையில் பக்கவாதம் ஏற்பட்டு உடலின் ஒரு பக்க உறுப்புகள் செயல் இழந்து போகும் நிலை கூட ஏற்படும். எனவே, இந்த நிலை ஏற்படாமல் இருக்கவும், நாள் முழுவதும் சுறுசுறுப்பாக இருக்கவும் உதவுகிறது திரிகோணாசனம்.



செய்முறை


கால்களை அகலமாக விரித்து நிற்கவும். இரண்டு கால்களுக்கும் இடையில் அவரவர் உயரத்திற்கு தகுந்தபடி இரண்டு அடி முதல் மூன்று அடிகள் ஒவ்வொரு குதிகாலுக்கும் இடையில் இடைவெளி இருக்கலாம்.

முதுகுதண்டு வளையாமல் நேராக நிமிர்ந்து நிற்கவும். இரண்டு கைகளையும் தோளுக்கு நேராய் பக்கவாட்டில் உயர்த்தி நிறுத்தவும். உள்ளங்களை தரையை பார்த்தவாறு இருக்கும் நிலையில் வைத்துக் கொள்ளவும். இப்பொழுது மூச்சை நன்றாக இழுக்கவும்.




பிறகு மூச்சை மெதுவாக விட்டவாறே இடது கைப்பக்கம் இடுப்பை வளைத்து குனிந்து இடது காலின் கணுக்காலை ஒட்டினாற் போல் தரையைத் தொடவும். வலது கை நேராய் வளையாமல் இருக்க வேண்டும். இப்போது தலையைத் திருப்பி வலது கை விரல்களின் நுனியைப் பார்க்கவும்.

இந்த நிலையில் ஏழு முதல் பத்து எண்ணும் வரை இருக்கவும். பிறகு மூச்சை இழுத்துக் கொண்டே நேராய் நிமிர்ந்து கைகளை பக்கவாட்டில் விரித்தபடியான நிலைக்கு வரவும். இப்போது கைகளை கீழே தொங்கப்போட்டு விடாமல் அப்படியே ஐந்து முதல் பத்து எண்ணும் வரை நின்று கொண்டே மூச்சை இழுக்கவும்.

பிறகு மூச்சை விட்டுக் கொண்டே வலது கைப்பக்கம் இடுப்பை வளைத்துக் குனிந்து, வலது கைவிரல் நுனிகள் வலது காலின் கணுக்காலுக்கு ஒட்டினாற் போல் தரையில் படும்படியான நிலையில் நிறுத்தவும். இந்த நிலையில் பத்து எண்ணும் வரை இருக்கவும். பிறகு மூச்சை இழுத்துக் கொண்டே நிமிர்ந்து கைகளை விரித்து நின்ற நிலைக்கு வரவும். இப்படி இரண்டு பக்கங்களிலும் குனிந்து நிமிர்ந்து செய்தால் அது ஒரு திரிகோண ஆசனம் என்று கணக்கிடலாம்.





இது போல் ஒரு முறைக்கு ஆறு தடவைகள் வரை செய்யலாம். இது அர்த்த திரிகோணாசனம் என்று அழைக்கப்படுகிறது.


பலன்கள்



மிகவும் எளிமையான இந்த ஆசனத்தை எவரும் இலகுவாக செய்ய முடியும். இந்த ஆசனம் செய்வதால் நீண்ட கால இடுப்பு வலி மறைந்து போகிறது. இடுப்பு பலம் பெறுகிறது. முதுகில் வலி, தோள் பகுதிகளில் சிலருக்கு காணப்படும் வலி இந்த ஆசனத்தால் நீங்கும். உடலின் ஜீவநாடிகள் ஆசனத்தின் மூலம் பலம் பெறுவதால் வாத ரோகங்கள் அண்டாது.

திரிகோணாசனத்தால் முதுகெலும்பு நன்றாக பக்கங்களில் திரும்பி வளைவதால், இளமையான தோற்றம் ஏற்படுகிறது.



நன்றி : விக்கிபீடியா, கூகுள்

யோகப்பயிற்சி தொடரும்...........


யோகாசன பயிற்சி - பகுதி - 14

முந்தைய பகுதி:

யோகாசன பயிற்சி - பகுதி - 13



பஸ்சிமோத்தாசனம்

 

 


இன்றைய காலகட்டத்தில் நீரிழிவு குறைபாட்டு தாக்கம் பலரையும் பாதித்திருக்கிறது. பலர் இன்னும் இந்த இதற்கு ஆட்படும் அபாயத்தில் இருந்து வருகின்றனர்.

இந்திய இளைய சமுதாயத்தில் 4 சதவீதம் பேர் நீரிழிவு குறைபாட்டு தாக்குதலுக்கு உள்ளாகி இருப்பதாக புள்ளி விபரங்கள் சொல்கின்றன. வாழ்க்கை முறை மாற்றம் தான் இதற்கு ஒரு காரணமாக சொல்லப்பட்டாலும் இன்று வரை தீர்மானமாக எந்த முடிவுக்கும் மருத்துவ உலகம் வர இயலவில்லை. நீரிழிவு நோயா அல்லது உடலின் ஒரு குறைபாடா என்றால் அது நோயல்ல, குறைபாடு என்பதே உண்மை.
பிறவி ஊனம் மட்டுமே குணப்படுத்த முடியாதது என்பர். ஆனால் நீரிழிவு என்பதை பொறுத்த மட்டில் பெரும்பாலோருக்கு இடையில் வரும் ஒரு ஊனம். ஆக, இந்த ஊனம் ஏற்படாமல் தடுக்க முயல வேண்டும். அதற்கு மிகப்பெரிய அளவில் கைகொடுப்பது யோகாசனங்கள் தான். அதிலும் குறிப்பாக யோகாசனங்களில் பஸ்சிமோத்தாசனம் நீரிழிவை தடுக்கிறது. மேலும் ஏற்கனவே பாதிக்கப்பட்டவர்களுக்கு நிவாரணம் தருகிறது. இந்த ஆசனத்தை செய்வதும் எளிது. உட்கார்ந்த நிலையிலான ஆசனங்களில் நீரிழிவுக்கு மிகவும் பயன்தரக்கூடிய ஒரு ஆசனம் இது என்று கூறலாம்.


செய்முறை


முதல் நிலை

விரிப்பில் மல்லாந்து படுக்கவும். இரண்டு கால்களையும் சேர்த்தாற் போல் நீட்டி வைத்துக் கொள்ளவும். இரண்டு கைகளை காதுகளை ஒட்டினாற் போல் தலைக்கு மேல் நீட்டி வைத்துக் கொள்ளவும். கைவிரல்கள் சேர்ந்திருக்க வேண்டும்.

இப்போது மூச்சை நன்றாக இழுத்துக் கொள்ளவும். இப்போது கைகள் காதுகளை விட்டு விலகாதபடி மூச்சைப் பிடித்து எழுந்து உட்காரவும். இது தான் முதல்படி நிலை.

இரண்டாவது நிலை

இப்போது மூச்சை விட்டபடியே முன்னுக்கு குனிந்து கால்களின் கட்டை விரல்களை, கைகளின் ஆள்காட்டி விரல், நடுவிரல் இவை இரண்டையும் கொக்கி போல் மடக்கி பிடித்துக் கொள்ளவும். இது இரண்டாவது நிலை.

மூன்றாவது நிலை

இந்த நிலையில் மூச்சை ஒரு தரம் இழுத்து விட்டவாறே இன்னமும் கீழே குனிந்து முழங்கைகள் முட்டிக்கால்களை ஒட்டி தரையை தொட்டவாறு இருக்கும் படியான நிலைக்கு வரவும். அதாவது முகத்தை முழங்கால்களின் சந்து வரை எட்டிக் குனியவும். மடக்கின் முழங்கைகள் தரையில் படவேண்டும். இந்த நிலையில் ஐந்து முதல் பத்து எண்ணும் வரை இருக்கலாம். பின்னர் கைகள் மட்டும் கால்கள் இரண்டின் பெருவிரல்களை மட்டும் பிடித்திருக்கும் படியான நிலைக்கு நிமிர்ந்து வரவும்.
இதற்கடுத்து கைகள் இரண்டையும் முதல்நிலையில் சொன்னது போல் காதுகளை ஒட்டியிருக்கும் படியான நிலையில் வைத்து நிமிர்ந்து உட்காரவும். பின்னர் உடலை சிறிது சிறிதாக பின்னோக்கி சாய்ந்து படுக்கை நிலைக்கு வரலாம். இப்போது மூச்சை இறுக்கிப் பிடிக்காமல் சாதாரண நிலையில் விட்டு வரவும்.
இவ்வாறு செய்து முடிப்பது ஒரு பஸ்சிமோத்தாசனம் ஆகும். இது போல் மூன்று முதல் நான்கு முறை செய்யலாம்.





ஏற்படும் சிரமங்கள்


சிலருக்கு ஆரம்ப நிலையில் படுத்து எழுந்திருப்பதற்கு மிகவும் சிரமமாக இருக்கும். கைகளை தரையில் ஊன்றினால் தான் எழுந்திருக்கவே முடியும் என்ற அளவில் இருப்பார்கள். ஆசனங்களை செய்ய முயற்சிக்கும் தொடக்க காலங்களில் இது போல் அசவுகரியங்கள் எழுந்தால் மனம் தளரக்கூடாது. தரையில் கைகளை ஊன்றித்தான் எழ வேண்டி இருந்தால் சில நாட்கள் அப்படியே செய்யலாம். நாளடைவில் முறையான பயிற்சி வந்து விடும். சிலருக்கோ, கைகளை மேலே காதுகளை ஒட்டினாற் போல் வைத்துக் கொண்டு எழுந்திருக்க முடியாது. கைகளை முன்னுக்கு வீசி பேலன்ஸ் செய்து எழுந்திருந்தால் தான் எழுந்திருக்க முடியும். இதுவும் நாளடைவில் சரியாகி விடும்.சிலருக்கு கால் விரல்களை கைகளால் தொட முடியாது. பொதுவாகவே முதுகெழும்பு கட்டை பாய்ந்து விட்டிருப்பதால் தான் இப்படி முன்னோக்கி குனிய முடியாத நிலை ஏற்பட்டிருக்கும். ஆனால் பழக பழக கால் விரல்களை கைகளால் பிடித்து விடலாம். சிலருக்கு கால் விரல்களை பிடிக்க முயலும் போது  முழங்கால் தூக்கிக் கொள்ளும். ஆனால் முழங்கால் மடிக்காமலேயே கூடுமான வரை குனிந்து தொட முயற்சிக்க வேண்டும். இப்படி பழகி வரும் போது தொடையில் உள்ள தசைகளும், நரம்புகளிலும் வலி ஏற்படுவதுண்டு. ஆனால் சில நாட்களில் சரியாகி விடும். சிலருக்கு முழங்காலில் முகத்தை கொண்டு வைக்க முடியாது. இதுவும் விடா முயற்சியுடன் பழகும் போது சரியாகி விடும். முடியாது என்பது எதுவுமே இல்லை.

 

பலன்கள்



பஸ்சிமோத்தனம் செய்யும் போது, குடல்கள், பித்தப்பை, இரைப்பை முதலியன நன்றாக அமுக்கப்படுகின்றன. உடலின் உயிராற்றலை வலுப்படுத்தும் முதுகெழும்பு, முதுகு நரம்பு வளைத்து இழுக்கப்படுகிறது. இதனால் நீரிழிவு குறைபாடு உண்டாவது தடுக்கப்படுகிறது. மேலும் ஆண்மை அதிகரிக்கிறது. மலட்டுத் தனம் நீங்குகிறது. வயிற்று வலி, தலைவலி, மூலக்கடுப்பு, இடுப்பு வலி, முதுகுவலி, பலவீனம் முதலியவை நீங்குகிறது. பெண்களிடத்தில் நீண்ட நாட்களாக இருக்கும் மாதவிடாய் கோளாறுகள் பூரணமாக குணமாகி விடும். இடுப்பு வலுவடையும். இளம்பெண்கள் திருமணத்திற்கு முன் இந்த ஆசனத்தை செய்து வருவதால் இடுப்பு சார்ந்த இனப்பெருக்க உறுப்புகள் வலுவடைந்து திருமணத்திற்கு பின் எளிதான சுகப்பிரசவம் உண்டாக வழி வகை ஏற்படும்.

எச்சரிக்கை


இந்த ஆசனத்தை வயிற்றில் அறுவை சிகிச்சை செய்து கொண்டவர்கள் செய்ய கூடாது. அறுவை சிகிச்சை நடந்து குறிப்பிட்ட காலங்கள் ஆகி இருந்தால் சிறந்த ஆசன நிபுணர்களுடன் ஆலோசனை பெற்று ஆசனத்தை செய்யலாம். வழக்கமாக ஆசனத்தை செய்து வரும்ட கர்ப்பிணிகள் ஆசனத்தை முழுமையாக செய்யாமல் உட்கார்ந்த நிலையில் காதுகளை ஒட்டி கைகளை நிமிர்த்திய நிலையில் ஆசனத்தை முடித்துக் கொள்ள வேண்டும். முன்பக்கம் குனிந்து முழங்காலை தொடும் நிலைக்கு போகக் கூடாது.ஆசனங்களை பழக்கமில்லாத புதிய கர்ப்பிணிகள் இந்த ஆசனத்தை எக்காரணம் கொண்டு செய்யக் கூடாது.

மனதை ஒருமுகப்படுத்த இந்த ஆசனம் மிகவும் உதவுகிறது எனபது குறிப்பிடத்தக்கது.


நன்றி : விக்கிபீடியா, கூகுள்

யோகப்பயிற்சி தொடரும்...........

யோகாசன பயிற்சி - பகுதி - 13


முந்தைய பகுதி:

யோகாசன பயிற்சி - பகுதி - 12


கோமுகாசனம்

 



கோ என்றால் பசு , இந்த ஆசனத்தின் இறுதி நிலையில் கால்கள் இரண்டும் சேர்ந்து பசுவின் முகத்தைப் போன்றுக் காட்சி தருவதால் இப்பெயர் பெற்றது.

செய்முறை 


முதலில் கால்களை நீட்டி உட்கார வேண்டும். இடக்காலின் முழங்காலை மடித்து பின்புறமாகக் கொண்டு சென்று இடக்காலின் மீது அமரவும். முழங்கால் தரைமீது இருப்பது போல வைக்கவும். வலக்காலை வளைத்து,இடக்காலுக்கு மறுபுறம் கொண்டு செல்லவும், அப்போது வலது பக்க முழங்கால்,இடது பக்க முழங்காலுக்கு மேலாக இருக்க வேண்டும். வலது பாதத்தை இடது பிருஷ்டத்திற்கு அருகில் கொண்டு வர வேண்டும். வலது பக்க முழங்கையை மடித்து, கீழ்ப் புறமாக வளைத்து, முதுகுப்புறம் கொண்டுவரவும். இடக்கையை வளைத்துத் தலைக்கு மேலாகப் பின்புறம் கொண்டு செல்லவும்.

மூச்சை உள்ளிழுத்து கைகளின் விரல்களை ஒற்றை ஒன்று பிடிக்க வேண்டும். சுவாசம் இயல்பாக இருக்கட்டும்.இந்த நிலையில்  மூச்சினை நன்றாக இழுத்து விடவும். மூச்சை வெளியில் விட்டு,பிடித்த விரல்களை விட வேண்டும். பின்புறம் கைகளை மெதுவாக எடுத்து முன்புறம் கொண்டு செல்லவும். மேலே உள்ள வலக்காலை மெதுவாக நீட்டவும்.இடக்காலை நீட்டி ஆரம்ப நிலைக்குக் கொண்டு வரவும். வலக்காலை முதலில் மடக்கியும் இதனைச் செய்யலாம்.

பலன்கள் 

·         தோல் மூட்டில் கால்சியம் சேர்வதைத் தடுக்கிறது.
·         தோல் தசைகள் மற்றும் மரபுக் கூட்டுத் தசைகளை வழுவடையச் செய்கிறது.
·         சப்பை பாதத்தை நீக்குவதோடு,அயர்வடைந்த கணுக்கால் மூடுத்தசைகள், நுனிக்கால் தசைகளைப் புத்துணர்வு பெறச் செய்கிறது.
·         முதுகு வலி மற்றும் தசைகளின் வழிகளை நீக்கும் ஆசனமாகும்.

 



நன்றி : விக்கிபீடியா, கூகுள்

யோகப்பயிற்சி தொடரும்...........


யோகாசன பயிற்சி - பகுதி - 12

முந்தைய பகுதி:

யோகாசன பயிற்சி - பகுதி - 11



விபரீத கரணி


டலை தலைகீழாக நிலை நிறுத்துவதே விபரீத கரணி ஆகும். விபரீத என்ற வடசொல்லுக்கு தலைகீழ் என்று பொருள்.

செய்முறை


விரிப்பின் மீது மல்லாந்து படுக்கவும். கால்களை வயிற்றின்மேல் மடித்து உயரத்தூக்கி கைகளின் உதவியால் அடிமுதுகை உயரக் கிளப்பி, முழங்கைகளைத் தரையில் நன்றாக ஊன்றி, விரிந்த இரு கைகளாலும் அடிமுதுகை தாங்கி கால்களை நேராக நிமிர்த்தி நிற்கவும். கண்பார்வை கால் பெருவிரலை நோக்கி இருக்க வேண்டும்.

ஆரம்பக் காலத்தில் பிறர் உதவியுடன் அடி முதுகு பாகத்தில் தலையணைகளைத் தாங்கலாகக் கொடுத்து செய்யலாம். அல்லது சுவரின் ஓரமாகப் படுத்து கால்களால் சுவரை மிதித்து அடிமுதுகை தூக்கி நிறுத்திச் செய்யலாம்.

பலன்கள்

  • தைராய்டு  சுரப்பியின் அதிக ரத்தம் பாய்வதால் தைராக்ஸின் போதுமான அளவு சுரந்து இரத்தத்தில் கலக்கிறது. புவிஈர்ப்பு சக்தியால் தலையில் இருக்கும் பீனியல் பிட்யூட்டரி சுரப்பிகளும் பிட்யூட்டரிங் எனும் மருந்தும் என்ன வேலை செய்யுமோ அதை இந்த ஆசனம் செய்து விடுகிறது
  • முதுகுத்தண்டின் மையத்திலுள்ள ஒரு விதத் திரவம் இந்த ஆசனத்தால் அதிக வேகமடைகிறது. அதனால் மெடுல்லா பாகத்தில் வந்து முடியும் நரம்புகள் சுறுசுறுப்படைகின்றன.
  • அட்ரீனல் சுரப்பியில் தலைகீழ் நிலையில் வயிற்றில் அழுத்தம் ஏற்படுவதால் அதன் ஹார்மோன் அதிகமாக இரத்தத்தில் கலக்கிறது. எனவே அட்ரீனலின் மருந்தின் வேலை இயற்கையாக நடைபெறுகிறது.
  • பிராணவாயு சூட்டினால் நுரையீரல்களிலுள்ள காற்றுக் குழாயின் இறுக்கம் தளர்த்தப்படுகிறது.
  • அதிக இரத்தத்தை இதயத்திற்கு அனுப்புகிறது. அதனால் அசுத்த இரத்தம் சுத்தம் அடைகிறது. முகத்தில் பொலிவு ஏற்படும். தலை சுற்றல், தலைவலி, கருப்பை ஏறுதல் அல்லது இறங்கிய நிலை அடிமுதுகு வலி, கழுத்துவலி, முதுகுத்தண்டு கோளாறு, அஜீரணத்தை போக்கி செரிமானத்தையும், கால் வீக்கம், ஆரம்பநிலை யானைக்கால் வியாதி ஆகியவற்றை சரி செய்கிறது.
  • கட்டி, முகப்பரு, முகத்தின் சுருக்கங்கள், இளநரை, எக்ஸிமா என்னும் தோல் நோய்கள் ஆகியவற்றை வராமல் தடுக்கிறது.
  • நரம்பு மண்டலம், மூளைமண்டலம், ஐம்புலன்கள் ஆகியவற்றைப் பலப்படுத்துகிறது. இரத்தமின்மை,
  • பற்கள் ஆட்டம் ஆகியவற்றை போக்குகிறது.
  • தொடர்ந்து மற்ற ஆசனங்கள், பிராணயாமம், கிரியை பயிற்சிகளுடன் இவ்வாசனத்தை செய்து வந்தால் ஆஸ்துமா, இருமல், மார்பு சளி, ஜலதோஷம், டி.பி., மூக்கடைப்பு, சைனஸ், அதிக இரத்த அழுத்தம், நீரிழிவு ஆகிய நோய்கள் குணமடைகிறது.

 

நன்றி : விக்கிபீடியா, கூகுள்

யோகப்பயிற்சி தொடரும்...........