Nov 9, 2012

பழமொழியும் விளக்கமும்




பழமொழி என்றால் என்ன?
ஆயிரக் கணக்கான ஆண்டுகளாக ஒரு சமுதாயத்தில், ஒரு பண்பாட்டில் உருவான நம்பிக்கைகளை, எண்ணங்களை, கருத்துக்களை, புத்திமதிகளை, அனுபவங்களை நறுக்குத்தெரித்தாற்போல நாலு வார்த்தைகளில் சொல்வதே பழமொழி. இது இலக்கிய நயமான சொற்களில் இருக்க வேண்டிய அவசியமில்லை. கொச்சையான கிராமத்தான் சொற்களிலும் இருக்கலாம். ஆனால் அதிலுள்ள ஆழமான கருத்தை விளக்க ஒரு பெரிய ஆய்வுக் கட்டுரையே தேவைப்படும். பாமர மக்களும் பழமொழிகளைச் சரளமாகப் பயன்படுத்துவது ஒரு பண்பாட்டின் அறிவு முதிர்ச்சியையும் அனுபவ முதிர்ச்சியையும் காட்டுகிறது.


"திருநீறிட்டார் கெட்டார் ; இடாதார் வாழ்ந்தார்

இதன் உண்மை பொருள் "திருநீறிட்டு யார் கெட்டார் ; இடாது யார் வாழ்ந்தார்" என்பதாகும்.


"மண்குதிரையை நம்பி ஆற்றில் இறங்காதே" .

உண்மையிலே இது "மண் குதிரை நம்பி ஆற்றில் இறங்காதே" என்பதே சரி. மண்குதிர் என்பது ஆற்று நீரின் சுழற்சியால் ஏற்படும் மணல்மேடுகள்.இது பாறை போல் காட்சியளித்தாலும், அதன் மீது ஏறினால் அது நீரில் அமிழ்ந்து விடும்.எனவே மண் குதிரை நம்பி ஆற்றில் இறங்கக் கூடாது.குதிர் என்பது குதிரை என திரிந்து விட்டது
  

"ஊரிலே கல்யாணம் மாரிலே சந்தனம்"

முன் காலத் திருமணங்களின் போது, பெரிய பெரிய கிண்ணங்களில் (சந்தனப்பேலா என்று பெயர்) குழம்பு போன்று சந்தனம் தயாரித்து நிறைத்திருந்தார்கள். வருகிற முதியவர்களுள் பெரும்பாலோர் சட்டையணிந்திருப்பதில்லை. குளிர்ச்சி பெறவும், வியர்வை நாற்றம் போகவும் சந்தனக் குழம்பை அள்ளி மார்பு முழுவதும் அவர்கள் பூசிக்கொண்டார்கள். அந்த வழக்கம் நீங்கிவிட்டதால் பழமொழிக்கும் வேலையில்லாமல் போய்விட்டது.


"தூங்கினவன் தொடையில் திரித்தவரை லாபம்"
தனித்தனியாய் உள்ள தேங்காய் நாரைத் தொடையில் வைத்துத் திரித்தால் அது ஒன்றாகச் சேர்ந்து கயிறு ஆகும். தரையில் அமர்ந்து வலக்காலை நீட்டிக் கொண்டு வெற்றுத் தொடை மேல் நாரை வைத்து இடுப்புப் பக்கமிருந்து முழங்கால் பக்கமாகக் கையால் உருட்டவேண்டும். அதற்குப் பெயர்தான் திரித்தல். திரிக்கும்போது நார் உறுத்தும், சிராய்ப்பு உண்டாகலாம். கஷ்டந்தான். பக்கத்தில் ஒருவன் காலை நீட்டித் தூங்குகிறான் என்று வைத்துக்கொள்ளுங்கள், அவனுடைய தொடையில் திரிக்கலாம் அல்லவா? விழித்துக்கொண்டான் என்றால் எதிர்ப்பான், திட்டுவான், மொத்தவும் கூடும். இருப்பினும் திரித்தவரை லாபந்தானே? முடிந்தவரைக்கும் பிறரை ஏமாற்றிக் காரியம் சாதிக்கலாம் என்று எண்ணுகிற எத்தர்கள் பயன்படுத்தும் பழமொழியிது!

  
சுக்கிற்கு மிஞ்சின மருந்துமில்லை. சுப்பிரமணியனுக்கு மிஞ்சின கடவுளும் இல்லை

இஞ்சியைக் காயவைத்து அதனை மருந்துப் பொருளாகப் பயன்படுத்துவர். பித்தம், வாயு, வயிற்றுப் பொருமல், அஜீரணம், வாந்தி, மயக்கம், தலைசுற்றல் போன்ற நோய்களை முற்றிலும் விரட்டும் தன்மை கொண்டது சுக்கு. இதனை உணவில் சேர்த்துக் கொண்டு வந்தால் நோய்வருவதில்லை. இந்நோய்களுக்கு முற்றுப்புள்ளி வைப்பதுடன், பிற நோய்கள் உடலில் ஏற்படாத வண்ணம் நோய் எதிர்ப்பு சக்தியையும் உடலுக்கு அளிக்கும் குணம் சுக்கிற்கு உண்டு.

  
ஆற்று நீர் வாதம் போக்கும்; அருவி நீர் பித்தம் போக்கும்; சோற்று நீர் இரண்டும் போக்கும்

ஆறு மலையிலிருந்து வருவதால் பல மூலிகைகள் அதில் கலந்திருக்கும். அதில் குளித்தால், வாதம் உள்ளிட்ட நோய்கள் நீங்கும். அது போன்றே அருவி நீரில் பல கனி()ச் சத்துக்கள் மிகுந்து காணப்படுவதால் இதனைக் கனிமச்சத்து நீர் என்றும் கூறலாம். பருகினால் அல்லது இதில் குளித்தால் பித்தநோய், கல்லீரல் தொடர்புடைய நோய்கள், கீழ் வாதம் உள்ளிட்ட பல நோய்கள் போகும். சோற்று நீர் என்பது நீராகாரம். இது அருந்திவர வாதம், பித்தம் இரண்டும் நீங்கும்

  
வெந்து கெட்டது முருங்கை, வேகாமல் கெட்டது அகத்தி

முருங்கைக் கீரையை அதிகம் வேகவைத்தால் அதன் சத்துக்கள் நமக்குக் கிடைக்காமல் போய்விடும். அகத்திக் கீரையை அதிகம் வேகாமல் பயன்படுத்தினால் முழுமையாக அதன் சத்து கிடைக்காது.
  

"பாவிக்குப் பாம்பு கண்"

யாயத்திற்கும்,உண்மைக்கும் முக்கியத்துவம் கொடுக்காமல் இருப்பவர்களைக் குறிக்கும். பாம்புக்கு கண்ணிருந்தாலும் அது தனது உணர்திறத்தாலேதான் பிறவற்றைக் கண்டுணர்கின்றது 
  

"ஏறச் சொன்னால் எருது கோபம், இறங்கச் சொன்னால் நொண்டி கோபம்"

ஒரு செயலை செய்யும் போது அது ஒரு சாரருக்கு சந்தோசத்தை கொடுக்கும்
மற்றவர்களுக்கு வருத்தத்தை கொடுக்கும். இது இயற்கை. உதாரணத்திற்கு மழை பெய்தால் விவசாயிகளுக்கு கொண்டாட்டம், அதே நேரத்தில் உப்பு விற்பவர்கள் , தீப்பெட்டி போன்ற தொழில் செய்பவர்களுக்கு திண்டாட்டம். எருதுவின் மேலே ஏறுவது தான் இங்கே செயல் , ஏறினால் எருதுவுக்கு வலிக்கும், ஏறவில்லை என்றால் நொண்டிக்கு கஷ்டம் என்று நேரிடையாக அர்த்தம் வருகிறது
  

"புல் தடுக்கிப் பயில்வான் போல"

புல் தடுக்கி பயில்வான் என்றால் அது நம் சந்திரகுப்தன் அமைச்சரான கௌடில்யர் என்னும் சாணக்கியர்தான் .. ஒரு முறை கானகப் பாதையில் காலில் புல் சிக்கி விழுந்தவர், உடனே அதை வேரோடு பிடுங்கி, எரித்து சாம்பலாக்கிகரைத்துக் குடித்தாராம்…. எதிரிகள் எவ்வளவு சிறிய அளவில் இருந்தாலும் அவர்களை அடியோடு அழிக்க வேண்டுமென குப்தனுக்கு அமைச்சர் சொன்ன அரசியல் அர்த்த சாஸ்திரம் அது.
  

"ஆலும் வேலும் பல்லுக்குறுதி. நாலும் ரெண்டும் சொல்லுக்குறுதி "

ஆல் என்பது ஆலமரம் . வேல் என்பது வேப்பமரம். ஆல மரத்தின் குச்சியும், வேப்ப மரத்தின் குச்சியும் கொண்டு பல் துலக்கும்போது இவை பற்களுக்கு நல்ல வலுவைத் தரும். சிறந்த மருத்துவப் பண்புகளையும் கொண்டவை. ஆகையால் இவை கொண்டு பல் விளக்க பல்வளம் சிறக்கும்
நாலும் ரெண்டும் சொல்லுக்குறுதி என்பது நாலடியாரும் திருக்குறளும் படித்து வந்தால் மொழி புலமை தானாக வரும்


“ஆயிரம் பொய்யைச் சொல்லியாவது ஒரு கலயாணத்தைப் பண்ணு

இதன் பொருள் ஆயிரம் பொய்யைச் சொல்ல வேண்டுமேன்பதல்லா, ஆயிரம் தடவை இரண்டுபக்கமும் போய்ச் சொல்லி, திருமணத்தை நடத்து என்பதாகும்


 “ஆயிரம் பேரைக் கொன்றவன் அரை வைத்தியன்”

இதில் பேரை என்ற வார்த்தை தவறு, ஆயிரம் வேரைக் கொன்றவன் அரை வைத்தியன்.அந்த வைத்தியனுக்கு ஆயிரம் மூலிகைச் செடிகளின் வேர்கலாவது அத்துபடியாகத் தெரிந்திருக்க வேண்டும்.
 


"புல் தடுக்கிப் பயில்வான் போல"

புல் தடுக்கி பயில்வான் என்றால் அது நம் சந்திரகுப்தன் அமைச்சரான கௌடில்யர் என்னும் சாணக்கியர்தான் .. ஒரு முறை கானகப் பாதையில் காலில் புல் சிக்கி விழுந்தவர், உடனே அதை வேரோடு பிடுங்கி, எரித்து சாம்பலாக்கிகரைத்துக் குடித்தாராம்…. எதிரிகள் எவ்வளவு சிறிய அளவில் இருந்தாலும் அவர்களை அடியோடு அழிக்க வேண்டுமென குப்தனுக்கு அமைச்சர் சொன்ன அரசியல் அர்த்த சாஸ்திரம் அது.



"ஆலும் வேலும் பல்லுக்குறுதி. நாலும் ரெண்டும் சொல்லுக்குறுதி "

ஆல் என்பது ஆலமரம் . வேல் என்பது வேப்பமரம். ஆல மரத்தின் குச்சியும், வேப்ப மரத்தின் குச்சியும் கொண்டு பல் துலக்கும்போது இவை பற்களுக்கு நல்ல வலுவைத் தரும். சிறந்த மருத்துவப் பண்புகளையும் கொண்டவை. ஆகையால் இவை கொண்டு பல் விளக்க பல்வளம் சிறக்கும்
நாலும் ரெண்டும் சொல்லுக்குறுதி என்பது நாலடியாரும் திருக்குறளும் படித்து வந்தால் மொழி புலமை தானாக வரும்


“ஆயிரம் பொய்யைச் சொல்லியாவது ஒரு கலயாத்தைப் பண்ணு”

இதன் பொருள் ஆயிரம் பொய்யைச் சொல்ல வேண்டுமேன்பதல்லா, ஆயிரம் தடவை இரண்டுபக்கமும் போய்ச் சொல்லி, திருமணத்தை நடத்து என்பதாகும்.


 “ஆயிரம் பேரைக் கொன்றவன் அரை வைத்தியன்”

இதில் பேரை என்ற வார்த்தை தவறு, ஆயிரம் வேரைக் கொன்றவன் அரை வைத்தியன்.அந்த வைத்தியனுக்கு ஆயிரம் மூலிகைச் செடிகளின் வேர்கலாவது அத்துபடியாகத் தெரிந்திருக்க வேண்டும்.

No comments: