Jul 20, 2012

யோகாசன பயிற்சி - பகுதி - 12

முந்தைய பகுதி:

யோகாசன பயிற்சி - பகுதி - 11



விபரீத கரணி


டலை தலைகீழாக நிலை நிறுத்துவதே விபரீத கரணி ஆகும். விபரீத என்ற வடசொல்லுக்கு தலைகீழ் என்று பொருள்.

செய்முறை


விரிப்பின் மீது மல்லாந்து படுக்கவும். கால்களை வயிற்றின்மேல் மடித்து உயரத்தூக்கி கைகளின் உதவியால் அடிமுதுகை உயரக் கிளப்பி, முழங்கைகளைத் தரையில் நன்றாக ஊன்றி, விரிந்த இரு கைகளாலும் அடிமுதுகை தாங்கி கால்களை நேராக நிமிர்த்தி நிற்கவும். கண்பார்வை கால் பெருவிரலை நோக்கி இருக்க வேண்டும்.

ஆரம்பக் காலத்தில் பிறர் உதவியுடன் அடி முதுகு பாகத்தில் தலையணைகளைத் தாங்கலாகக் கொடுத்து செய்யலாம். அல்லது சுவரின் ஓரமாகப் படுத்து கால்களால் சுவரை மிதித்து அடிமுதுகை தூக்கி நிறுத்திச் செய்யலாம்.

பலன்கள்

  • தைராய்டு  சுரப்பியின் அதிக ரத்தம் பாய்வதால் தைராக்ஸின் போதுமான அளவு சுரந்து இரத்தத்தில் கலக்கிறது. புவிஈர்ப்பு சக்தியால் தலையில் இருக்கும் பீனியல் பிட்யூட்டரி சுரப்பிகளும் பிட்யூட்டரிங் எனும் மருந்தும் என்ன வேலை செய்யுமோ அதை இந்த ஆசனம் செய்து விடுகிறது
  • முதுகுத்தண்டின் மையத்திலுள்ள ஒரு விதத் திரவம் இந்த ஆசனத்தால் அதிக வேகமடைகிறது. அதனால் மெடுல்லா பாகத்தில் வந்து முடியும் நரம்புகள் சுறுசுறுப்படைகின்றன.
  • அட்ரீனல் சுரப்பியில் தலைகீழ் நிலையில் வயிற்றில் அழுத்தம் ஏற்படுவதால் அதன் ஹார்மோன் அதிகமாக இரத்தத்தில் கலக்கிறது. எனவே அட்ரீனலின் மருந்தின் வேலை இயற்கையாக நடைபெறுகிறது.
  • பிராணவாயு சூட்டினால் நுரையீரல்களிலுள்ள காற்றுக் குழாயின் இறுக்கம் தளர்த்தப்படுகிறது.
  • அதிக இரத்தத்தை இதயத்திற்கு அனுப்புகிறது. அதனால் அசுத்த இரத்தம் சுத்தம் அடைகிறது. முகத்தில் பொலிவு ஏற்படும். தலை சுற்றல், தலைவலி, கருப்பை ஏறுதல் அல்லது இறங்கிய நிலை அடிமுதுகு வலி, கழுத்துவலி, முதுகுத்தண்டு கோளாறு, அஜீரணத்தை போக்கி செரிமானத்தையும், கால் வீக்கம், ஆரம்பநிலை யானைக்கால் வியாதி ஆகியவற்றை சரி செய்கிறது.
  • கட்டி, முகப்பரு, முகத்தின் சுருக்கங்கள், இளநரை, எக்ஸிமா என்னும் தோல் நோய்கள் ஆகியவற்றை வராமல் தடுக்கிறது.
  • நரம்பு மண்டலம், மூளைமண்டலம், ஐம்புலன்கள் ஆகியவற்றைப் பலப்படுத்துகிறது. இரத்தமின்மை,
  • பற்கள் ஆட்டம் ஆகியவற்றை போக்குகிறது.
  • தொடர்ந்து மற்ற ஆசனங்கள், பிராணயாமம், கிரியை பயிற்சிகளுடன் இவ்வாசனத்தை செய்து வந்தால் ஆஸ்துமா, இருமல், மார்பு சளி, ஜலதோஷம், டி.பி., மூக்கடைப்பு, சைனஸ், அதிக இரத்த அழுத்தம், நீரிழிவு ஆகிய நோய்கள் குணமடைகிறது.

 

நன்றி : விக்கிபீடியா, கூகுள்

யோகப்பயிற்சி தொடரும்...........

No comments: