Jul 4, 2012

யோகாசன பயிற்சி - பகுதி - 8




முந்தைய பகுதி:



புஜங்காசனம்



புஜங்கம் என்றால் நாகப்பாம்பு என்று பொருள், இந்த ஆசன நிலையில் தலைதூக்கி இருக்க நல்லபாம்பு படம் எடுத்தது போல தோற்றமளிப்பதால் இதற்கு இந்தப் பெயர் ஏற்பட்டது.

இது குறிப்பாக பெண்களுக்கு உகந்த ஆசனம்.

செய்முறை 

ஒரு விரிப்பை நீளத்தில் மடித்து தரைமீது வைத்து அதன்மேல் மெதுவாக குப்புறப் படுக்கவும். உடலில் உள்ள தசைகளுக்கு ஒருவிதமான ஒய்வு தரும் நிலையை உருவாக்கிக் கொள்ளவும்.

இரு கைகளையும், இரு பக்கங்களிலும் உங்கள் உள்ளங்கை, விரிப்பின் மேல் இருக்கும்படி அமைக்கவும். விரல்கள் முன்புறம் நோக்கி இருக்க வேண்டும். கால்களின் முன் பாதங்கள் பின்புறம் நோக்கி இருப்பது போல படுத்திருக்க வேண்டும்.

அதே சமயத்தில் நெற்றி, மேவாய், தரையைத் தொட்டுக் கொண்டிருப்பது போல வைத்து உடல் உறுப்புகளைத் தளர்ந்த நிலையில் வைத்திருக்கவும்.

பின்பு மெதுவாக தலையையும், மார்பையும், மூச்சை இழுத்துக் கொண்டு மேல் நோக்கி உயர்த்தவும். இதில் முதுகுத் தண்டு பின்பக்கமாக வளைவு தருவதைப் பார்க்கலாம். இப்போது உடலை ஆட்டவோ, அசைக்கவோ கூடாது, சிறிது சிறிதாக மேல்நோக்கி உயர்த்திக் கொண்டே செல்ல வேண்டும்.

இடுப்புப் பகுதி விரிப்பிலேயே இருக்க வேண்டும். முன் பாதங்களும் தரையைத் தொட்டுக் கொண்டிருக்க வேண்டும். பின்பு மெதுவாக தலையைப் பழைய நிலைக்கு மூச்சைவிட்டுக் கொண்டே வரவும்.

இந்த ஆசனம் செய்யும்போது தொப்புளில் இருந்து கால் வரையிலும், பூமியில் படும்படி வைத்துக்கொள்ள வேண்டும். பிறகு மெதுவாக கை அழுத்தத்தைக் குறைத்து மெதுவாக முன்பு இருந்த நிலையில் முன்பகுதி உடலைக் கீழாக கொண்டு வரலாம்.

பிறகு மூச்சை வெளியே விடவும். இந்த ஆசனத்தை செய்ய ஆரம்பிக்கும்போது முதுகை கொஞ்சம் கொஞ்சமாக வளைத்து கையை முழுவதும் நிமிர்த்தாமல் பழக்கத்திற்குக் கொண்டு வர வேண்டும்.

இந்த ஆசனத்தினை ஐந்திலிருந்து பத்து தடவைகள் செய்து வரலாம்.

பலன்கள்

  • இளம் பெண்களுக்கு இந்த ஆசனம் மிகுந்த பலன்களைத் தரும்.
  • பெண்களின் அண்ட கோசத்தையும் கருப்பையையும் சுறுசுறுப்படையச் செய்து வலுவாக்கும். குறித்த காலத்தில் மாதவிலக்கு தடையின்றி வரும்.
  • மலச்சிக்கல் நீங்கும். குடல் பக்கம் அழுத்தப்படுவதால் தங்கியிருக்கும் மலமானது மலத்துவாரத்துக்குத் தள்ளப்படும்.
  • மூலவியாதி நீங்கும்.
  • இடுப்புவலி நீங்கும்.
  • இந்திரியக் கோளாறுகள் நீங்கி நீடித்த இல்லற இன்பத்துக்கு வழி வகுக்கும்.
  • தண்டுவடம், பிடரியை வலுவள்ளதாக்கும்.
  • இடுப்பைப் பலப்படுத்தி ஊளைச் சதையைக் குறைக்கும்.
  • முதுகெலும்பை உறுதியாக்கும். கைகளுக்குப் பலத்தை ஏற்படுத்தும்.
  • மார்பில் உள்ள சளியை நீக்கிவிடும் வல்லமை பெற்றது.
  • கூன் நிமிரும்.
  • நல்ல பசி உண்டாகும்.
  • தொந்தி விழுவதை தடுக்கிறது.
  • முதுகு எலும்பிற்கு ஆரோக்கியம் அளிக்கிறது.


நன்றி : விக்கிபீடியா, கூகுள்

யோகப்பயிற்சி தொடரும்...........


No comments: