Jul 7, 2012

யோகாசன பயிற்சி - பகுதி - 10


முந்தைய பகுதி:

யோகாசன பயிற்சி - பகுதி - 9


தனுராசனம்


தனுஷ் என்றால் வில் என்று பொருள். உடலை வில் போல வளைப்பதால் யோகாவில் இந்த ஆசனத்திற்கு தனுராசனம் என பெயரிடப்பட்டுள்ளது. புஜங்காசனமும், சலபாசனமும் இணைந்து செய்வதே தனுராசனம். வயிற்றின் மேல் பகுதி புஜங்காசனம் போலவும், வயிற்றுக்கு கீழ் பகுதி சலபாசனம் போலவும், இரண்டு ஆசனங்களையும் கைகள் மற்றும் கால்களால் இணைப்பதே தனுராசனமாகும்

செய்முறை 

முதலில் தரையில் (விரிப்பில்) குப்புறபடுக்கவும். உடல் நேர்க்கோடு போலவும், கால்கள் சேர்ந்து இருக்கட்டும். கைகள் பக்கவாட்டில் வைத்துக் கொள்ளவும். மெதுவாக மூச்சை உள்ளிழுத்து கால்களை பின்புறமாக மேலே தூக்கவேண்டும்.கைகளால் கணுக்கால்களை பிடிக்கவும்.அதே சமயத்தில் தலையை மேல் தூக்கிப் பின்புறமாக வளைக்க வேண்டும் வயிற்றுப்பகுதி மட்டும் தரையில் படிந்திருக்க வேண்டும். இந்த நிலையில் நார்மலாக மூச்சு விட்டு கொண்டு சில நொடிகள் இருக்கவும் மூச்சை வெளிவிட்டு நிதானமாக நார்மல் நிலைக்கு திரும்பவும்.இந்த ஆசனத்தை இரண்டு நிமிடம் செய்யலாம்

பயன்கள்


·    இது பெண்களுக்கு நல்ல பலன் தரும் ஆசனம். மாதவிடாய், கர்ப்பக் கோளாறுகள், வயிற்றுக் கோளாறுகள் நீங்கும்.
·    அதிக கொழுப்பை நீக்கி பருமனை குறைகிறது.
நரம்புகளும் முதுகெலும்பும் வளையும். கூன் முதுகு, முதுகு வலி, இடுப்பு வலி நீங்கும்.
·    சிறுநீரக நோய்கள் நீங்கும்.
·    பெண்களுடைய ஓவரி ஆண்களுடைய டெஸ்டீஸ் மற்றும் சிறுநீரகங்களைச் சுறுசுறுப்படையச் செய்து அதனால் பலம் பெற்று இளமை உண்டாகும்.

எச்சரிக்கை


உயர் ரத்த அழுத்தம், அடிவயிறு கோளாறுகள், முழங்கால், இடுப்பு வலி முதுகுவலி உள்ளவர்கள் இந்த ஆசனத்தை தவிர்க்கவும்.

 

 

நன்றி : விக்கிபீடியா, கூகுள்

யோகப்பயிற்சி தொடரும்...........

 

No comments: