Nov 23, 2012

வரமாக வந்த வாட்டர் பியூரி ஃபையர்!





இந்தியாவில் 21 சதவிகித தொற்றுநோய்கள் தண்ணீர் மூலமே பரவுகின்றன என உலக சுகாதார நிறுவனம் கூறுகிறது. பாதுகாப்பான தண்ணீர் பருகாததால் ஏற்படும் பிரச்னைகள் எண்ணில் அடங்காதவை. தண்ணீரைக் காய்ச்சி, வடிகட்டி, ஆற வைத்துக் குடிப்பதற்கெல்லாம் நம்மில் பலருக்கு நேரமோ, பொறுமையோ இருப்பதில்லை. .எஸ்.. முத்திரையுள்ள வாட்டர் கேன் பயன்படுத்தினாலும்கூட கிருமிகளுக்குப் பஞ்சமில்லை. எங்கும் எதிலும் கலப்படம் என்பது குடிநீரையும் விட்டு வைக்கவில்லை. ‘நல்ல தண்ணீர்என்று உத்தரவாதம் தரக்கூடிய ஒரே வசதி வாட்டர் பியூரிஃபையரில்தான் கிடைக்கிறது.
சரி... வாட்டர் பியூரிஃபையர் வாங்கப் போகிறீர்களா?
கடைக்குள் நுழைந்ததும் ஏகப்பட்ட பிராண்டுகள், கிறுகிறுக்க வைக்கும் விலைப்பட்டியல், எந்த பிராண்ட் பெஸ்ட்? நம்ம பட்ஜெட்டுக்கு எது சரியா இருக்கும்? இது போன்ற குழப்பங்கள்தான் மிஞ்சும். அந்தக்  கவலைகளை நீக்க இதைப் படியுங்கள் முதலில்...
இரண்டு வகை வாட்டர் பியூரிஃபையர்கள் இருக்கின்றன. உப்புத் தண்ணீரை சுத்தம் செய்து, சுத்திகரிக்கப்பட்ட தண்ணீராகக் கொடுப்பது ஸிளி (Reverse Osmosis) வகை. இது, சவ்வூடு பரவல் முறையில் செய்யப்படுவது. நிலத்தடி நீர், கிணற்று நீரை சுத்திகரிப்பு செய்து நல்ல தண்ணீராக கொடுப்பது UV (Ultra Violet)   வகை. இந்த இரு அடிப்படைகளில்தான் தண்ணீர் சுத்திகரிப்பு செய்யப்படுகிறது.
சில மாடல்களை கிச்சனில் உள்ள பைப்புடன் இணைத்து சுவரில் பொருத்திக் கொள்ளலாம். தனியாக இடவசதி தேவையில்லை. நம் வீட்டுக் குழாயில் வரும் தண்ணீரில் உள்ள குளோரின், கிருமிகள் போன்றவற்றை கிட்டத்தட்ட 7 கட்டங்களாக சுத்தம் செய்து, நல்ல தண்ணீராக்கி நமக்கு கொடுப்பதுதான் வாட்டர் பியூரிஃபையரின் வேலை.
இக்கருவி ஒரு மணி நேரம் இயங்குவதற்கு 2 யூனிட் மின்சாரம் செலவாகும். பெரும் பாலும் எல்லா பிராண்டுகளுமே ஒரு வருட வாரண்டியுடன் கிடைக்கின்றன. பியூரிஃபையர் மூலம் சுத்தம் செய்யப்பட்ட தண்ணீர், உடலுக்கு எவ்விதத் தீங்கையும் கொடுக்காது. அப்படியே குடிக்கலாம்... சமையலுக்கும் பயன்படுத்தலாம். கொதிக்க வைக்க வேண்டிய தேவையில்லை.
என்னென்ன பிராண்டுகள்?
யுரேகா ஃபோர்ப்ஸ் நிறுவனத்தைச் சேர்ந்த வாட்டர் பியூரிஃபையர்கள்தான் மார்க்கெட்டில் அதிகம் கிடைக்கின்றன. (விலை: ரூபாயில்)Classic    :    7,990  (UV முறை  )DUO    :    16,990 (RO + UV   என இரண்டு வகைகளும்)Enhance    :    13,990 (RO முறை).Booster    :    9,190 (இதற்கு கனெக்ஷன் தேவையில்லை. ஒரு பைப் மூலம் குடத்தில் உள்ள தண்ணீரையே சுத்தப்படுத்திக்  கொள்ளலாம்).Hiflow    :    9,490 (ஒரு மணி நேரத்துக்கு 180 லிட்டர் தண்ணீர் கொடுக்கக் கூடியது. கூட்டுக் குடும்பத்துக்கு பொருத்தமாக இருக்கும்).Infiniti    :    11,490.
Sensa    :    21,990 (UV + UF) பல கட்டங்களாகத் தண்ணீரை சுத்தப்படுத்தி அதிலுள்ள பாக்டீரியாக்களை நீக்குவதுதான் FU என்ற Ultra Filterationமுறை. Nano RO+UV                :  10,000
Spring Fresh DX                :  15,000 (எப்படிப்பட்ட தண்ணீரையும் சுத்தப்படுத்தக் கூடியது).Elegant RO                :  11,600
Crystal                :  8,000
AquafloDX                :  6000  இவை யுரேகா ஃபோர்ப்ஸ் நிறுவனத்தின் தயாரிப்புகள். Pureit RO Marvella RO        :  13,500
Marvella Metro                :  7,500
Whirlpool Minerala85            :  16,800
KENT Grand+                :  16,800 இவை மற்ற பிராண்டுகள்.
சில இடங்களில் கிடைக்கும் தண்ணீர், அதிக உப்புத்தன்மையுடன் இருக்கும். பெரிய தொழிற்சாலைகள், எண்ணெய் நிறுவனங்கள் உள்ள பகுதிகளில் ஆயில் தன்மையுடன் கூடிய தண்ணீர் வரும். இந்தப் பகுதியில் வசிப்பவர்களுக்கு ஹிதி   முறையில் சுத்திகரிப்பு செய்யும் பியூரிஃபையர் தேவைப்படும்.
வீட்டு உபயோகத்துக்காகப் பயன்படும் வாட்டர் பியூரிஃபையர்கள், ஒரு மணி நேரத்துக்கு 6 லிட்டரிலிருந்து 60 லிட்டர் வரை தண்ணீரை சுத்தம் செய்து தரக்கூடியவை. அதிகம் தண்ணீர் தேவைப்படுபவர்கள் அதற்கேற்ற வசதியுள்ளவற்றை வாங்கி பயன்படுத்தலாம்.
ஒவ்வொரு வாட்டர் பியூரிஃபையரும் 6 ஆயிரம் லிட்டர் வரை தண்ணீரை சுத்திகரித்துக் கொடுக்கும். அதற்குப் பிறகு பியூரி ஃபையரில் உள்ள ஃபில்டரை மாற்ற வேண்டும். 6 ஆயிரம் லிட்டரை நெருங்கும் போது ஃபில்டரை மாற்றுவதற்கான அலர்ட் கொடுப்பதற்கான வசதிகள் சில பியூரிஃபையர்களில் கிடைக்கின்றன. ஒரு ஃபில்டருக்கான செலவு குறைந்தது 2,000 ரூபாய்க்கு மேலாகும்.
வாட்டர் பியூரிஃபையர்களுக்கு பராமரிப்பு என்று தனியாக எதுவும் தேவை இல்லை. சில மெஷின்களில் ஃபில்டர் செய்த தண்ணீர் போக, அழுக்குகள் ஒரு பகுதியில் தேங்கி நின்றுவிடும். அவற்றை மட்டும் 15 நாட்களுக்கு ஒரு முறை க்ளீன் செய்தால் போதும். மற்றபடி 4 மாதங்களுக்கு ஒரு முறை சர்வீஸ் செய்ய வேண்டும்.
சுத்திகரிக்கப்பட்ட தண்ணீரை சேமித்து வைத்திருந்தால், 2 நாட்களுக்குள் பயன் படுத்த வேண்டும். இல்லையென்றால், மறு படியும் கிருமிகள் சேருவதற்கான வாய்ப்பு உள்ளது. சில பியூரிஃபையர்களில் சில்வர் நானோ டெக்னாலஜி பொருத்தப்பட்டிருக்கும். இந்த வசதி இருந்தால், நாம் சேமித்து வைத்திருக்கும் சுத்திகரிக்கப்பட்ட தண்ணீர் எந்தக் கிருமி தாக்குதலுக்கும் உள்ளாகாது. ஆனாலும், தண்ணீரை அவ்வப்போது ஃபிரெஷ்ஷாக பயன்படுத்திக் கொள்வதே நல்லது.
தண்ணீரை ஸ்டோரேஜ் முறை மூலம் சுத்தப்படுத்துவதற்கும் நிறைய வசதிகள் இருக்கின்றன. நம் வீட்டுக்கு வரும் மெட்ரோ வாட்டரை சுத்தப்படுத்திக் கொடுப்பதற்காகவே குறைந்த செலவில் ஸ்டோரேஜ் பியூரிஃபையர்கள் மார்க்கெட்டில் கிடைக்கின்றன. இதன் மூலம், குறைந்தது 20 லிட்டர் தண்ணீர் வரைக்கும் சேமித்து, சுத்தப்படுத்திக் கொள்ளலாம். இதிலும் நிறைய பிராண்டுகள் இருக்கின்றன.
Aquasue Amrit          :   2,250 (20 லிட்டர் வரை)Classic Fi Compact :   1,200   (5 லிட்டர்)Classic Autofill         :   2,200   (8 லிட்டர்)Classic Autofill     :   3,200   (18 லிட்டர்)Kent Gold         :   3,700 (10 லிட்டர்) இதிலும் ஃபில்டரை 6 மாதத்துக்கு ஒருமுறை மாற்றிக் கொள்ள வேண்டும்.

No comments: