Nov 28, 2012

தாலிக்கு தங்கம், திருமண நிதியுதவி பெறுவது எப்படி?


தமிழக அரசு சார்பில், ஏழை பெண்களின் திருமணத்துக்கு உதவும் வகையில்மூவலூர் ராமாமிர்தம் அம்மையார் நினைவு திருமண நிதியுதவி திட்டம்அமல்படுத்தப்பட்டு வருகிறது. இத்திட்டத்தின்கீழ் நிதியுதவி மற்றும் தாலிக்கு தங்கம் பெற விண்ணப்பிக்கும் முறை:
மணப்பெண் பெற்றோரின் ஆண்டு வருமானம் ரூ.24 ஆயிரத்துக்குள் இருக்க வேண்டும்.மணப்பெண்ணின் வயது திருமண நாளன்று 18 வயது முடிவுற்றிருக்க வேண்டும். திருமண நாளுக்கு 40 நாட்களுக்கு முன்னதாக விண்ணப்பிக்க வேண்டும்.பத்தாம் வகுப்பு பள்ளியில் படித்து தேர்ச்சி அல்லது தோல்வி பெற்றவர்கள் விண்ணப்பிக்கலாம்.பழங்குடியினர் 5ம் வகுப்பு வரை படித்திருந்தால் போதுமானது.
பட்டம் மற்றும் பட்டயபடிப்பு கல்லூரியிலோ, அங்கீகரிக்கப்பட்ட திறந்தவெளி பல்கலைக்கழகங்களிலோ படித்து தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.மாநகராட்சி எல்லைக்குள் வசிப்பவர்களுக்கு அங்கேயே விண்ணப்பம் பெற்று, பூர்த்தி செய்து விண்ணப்பிக்கலாம். மாநகராட்சிக்கு வெளியே வசிப்பவர்கள் அந்தந்த பகுதியில் ஊராட்சி ஒன்றிய அலுவலகங்களில் விண்ணப்பம் பெற்று, விண்ணப்பிக்கலாம். விண்ணப்பங்கள் பரிசீலிக்கப்பட்டு, மாவட்ட சமூக நலத்துறை மூலம் நிதியுதவி வழங்கப்படும்.
இதுதவிர, .வே.ரா.மணியம்மையார் நினைவு விதவை மகள் திருமண நிதியுதவி திட்டம், அன்னை தெரசா நினைவு ஆதரவற்ற பெண்கள் திருமண நிதியுதவி திட்டம், டாக்டர் முத்துலட்சுமி ரெட்டி நினைவு கலப்பு திருமண நிதியுதவி திட்டம், டாக்டர் தர்மாம்பாள் அம்மையார் நினைவு விதவை மறுமண ஊக்குவிப்பு திட்டம் என்ற திருமண நிதியுதவி திட்டங்களும் அமலில் உள்ளன. இத்திட்டத்தின்படியும் தலா ரூ.25 ஆயிரம் முதல் ரூ.50 ஆயிரம் வரை நிதியுதவி மற்றும் தாலிக்கு 4 கிராம் தங்கம் வழங்கப்படுகிறது.

No comments: