Nov 28, 2012

பதிவுத் திருமணம் இது எளிமை இனிமை

தமிழ்நாடு திருமணப் பதிவுச் சட்டத்தின்படி, இன்றைக்கு எந்த மதத்தைச் சேர்ந்தவர்களாக இருந்தாலும், திருமணமான 90 நாட்களுக்குள் திருமணத்தைப் பதிவு செய்ய வேண்டியது கட்டாயம். சரி. எப்படிப் பதிவு செய்வது?
கணவன், மனைவியின் ஊர், தம்பதி வாழும் இடம், திருமணம் நடக்கும் இடம்... இவற்றின் அருகில் இருக்கும் சார்பதிவாளர் அலுவலகத்தில் திருமணத்தைப் பதிவு செய்ய வேண்டும்.
 
இதற்கான படிவம் சார்பதிவாளர் அலுவலகத்தில் இலவசமாகக் கிடைக்கும். இணையத்திலும் கிடைக்கிறது.
 
இரண்டு சாட்சிகள் தேவை.
ரேஷன் கார்டு, வாக்காளர் அடையாள அட்டை, பேன் கார்டு, பள்ளி இறுதிச் சான்றிதழ், அரசுத்துறை அல்லது உள்ளாட்சி அமைப்புகளால் வழங்கப்பட்ட அடையாள அட்டை, போட்டோவுடன் கூடிய வங்கி பாஸ்புக் அல்லது அஞ்சலக சேமிப்புப் புத்தகம்... இவற்றில் ஏதாவதொன்றின் நகலை அடையாளம், விலாசத்துக்கான சான்றாகக் கொடுக்க வேண்டும்.
 
கணவன், மனைவி இருவரின் வயது சான்றிதழ் நகல், திருமணப் பத்திரிகை நகல் அல்லது திருமணம் நடந்ததற்கான ஆதாரமாக ஏதாவதொன்றை கொடுக்க வேண்டும்.
 
திருமணத்தை நடத்தி வைத்த மத குருமார்/ஐயர், திருமணப் பதிவு விண்ணப்பத்தில் கையெழுத்திட வேண்டும். படிவத்தைப் பூர்த்தி செய்து, எல்லா சான்றிதழ்களையும் இணைத்து சார்பதிவாளர் அலுவலகத்தில் திருமணத்தைப் பதிவு செய்யலாம்.
கட்டணம் 100 ரூபாய். 90 நாட்களுக்கு மேல் பதிவு செய்ய 150 ரூபாய். இப்போதெல்லாம் சில குறிப்பிட்ட கோயில்கள், சர்ச்சுகளிலேயே திருமணத்தைப் பதிவு செய்வதற்கான வசதி வந்துவிட்டது. திருமணமான 60 நாட்களுக்குள் பதிவு செய்யவில்லையென்றால் 1,000 ரூபாய் அபராதம் என்கிறது சட்டம்.

No comments: